எஸ்.வி.சேகருக்கு சிறை செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும்- அமைச்சர் ஜெயக்குமார்!
எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, காசிமேடு பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியே மீண்டும் மலரும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும் என கூறினார். எஸ்.வி.சேகர் மீது நேற்று சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், முதல்வர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி புகாரளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.