2000 ரூபாய் நோட்டுகளுக்கு அரசு பேருந்தில் தடையா.? போக்குவரத்து கழகம் விளக்கம்.!
டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் நோட்டுகளுக்கு அரசு பேருந்தில் தடையில்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெரும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இருந்தும், செப்டம்பர் 30 வரையில் 2000 ரூபாய் நோட்டுக்கான மதிப்பு குறையவில்லை. அது செல்லும் என்றே ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்நிலையில், அறிவிப்பு வந்தவுடன், தமிழக போக்குவரத்து கழகம், பொதுமக்களிடம் இருந்து டிக்கெட் எடுக்க, 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பயணிகளிடம் இருந்து டிக்கெட் விற்பனைக்காக நடத்துனர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.