பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்திடுக -ஸ்டாலின்
விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்.தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை
முதலமைச்சர் அரசு உறுதி செய்திடுக என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!
உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்!
தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை @CMOTamilNadu அரசு உறுதி செய்திடுக! pic.twitter.com/IJddHt9RJu
— M.K.Stalin (@mkstalin) October 23, 2020