போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு-அமைச்சர் சி.வி.சண்முகம்
100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வந்துள்ளது .
பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைகளின் விடுதலை தினமாக அறிவிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.