அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி…! வேலைநிறுத்த போராட்டம் தொடரும் -அரசு மருத்துவர்கள் ..!
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஷுடன் அரசு மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பீலா ராஜேஷுடன் நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.