#BREAKING : வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்வு..!

Default Image

வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்வு.

காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில்,  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 5,500 கோடி இழப்பு கடன் உட்பட ரூபாய் 20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், அனைத்து நகராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 90 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். அனைத்து பேரூராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 70 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும் என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்