தூத்துக்குடி மக்களை சமாதானப் படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது!- ஸ்டெர்லைட் தரப்பு வாதம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 உயிர்கள் உயிரிழந்ததால் கொதித்தெழுந்த மக்களை சமாதானம் செய்யவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது என்றும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் இருக்கும் தொழிற்சாலைகளில் அதிகம் மாசுகளை வெளியிடுவது ஸ்டெர்லைட் தொழிற்சாலை என்று கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் வந்த பின்னர் தான் அங்கு மாசுபாடு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஆலையால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் இல்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் விளக்கமனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் இல்லை என்று என்.ஐ.ஆர்.ஐ (NIRI ) அமைப்பு கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்துள்ளது. மேலும் ஆலை மூடிய பின் காற்று மாசு குறைந்ததற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் 10 ஆண்டுகளில் 500 கோடி வரை செலவளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025