6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கொரோனாவால் நேற்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனாவுக்கு எதிரான போரில், பாலின பேதமின்றி, அரசியல் காழ்ப்பின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுதல் அவசியம். நாட்டிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் 22 ஆகஸ்ட் அன்று, தமிழகம் 6400 இறப்புகளை எட்டியுள்ளது. இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…