கொரோனா இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் – திமுக எம்.பி. கனிமொழி

Default Image

6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கொரோனாவால் நேற்று  97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனாவுக்கு எதிரான போரில், பாலின பேதமின்றி, அரசியல் காழ்ப்பின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுதல் அவசியம். நாட்டிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் 22 ஆகஸ்ட் அன்று, தமிழகம் 6400 இறப்புகளை எட்டியுள்ளது. இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்