அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன்!
அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் நோய் தாக்கி இறந்து உள்ளதாகவும், குறிப்பாக மழைக்காலங்களில் நோயால் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டுமெனவும், கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை மருத்துவர் காலி பணியிடங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கால்நடை மருந்தகங்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையும் பாதிக்கப்படுவதாக தகவல் வருவதாகவும், தமிழக அரசு கால்நடை பொது மருத்துவம்மனைகள், பன்முக மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மூலம் கால்நடைகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.