அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் – ராமதாஸ்

Default Image
அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்வி கனவுக்கும், சமூகநீதிக்கும் எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்களுக்கு மருத்துவம் வழங்குவது மாநில அரசுகளின் கடமை. மாநில அரசுகள் அவற்றின் கடமையை செய்ய மத்திய அரசு உதவியாக இருக்க வேண்டும். மாறாக, அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு மாநில அரசுகளை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முனையக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தை அது சிதைத்து விடும். எனவே, உயர்சிறப்பு படிப்புகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்; அவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த அதிகாரங்களையும், உரிமைகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/posts/1657356144428665

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்