பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்களுக்கான விற்பனை நேரத்தை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை அரசு வரையறுக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், நாளை முதல் தளர்வுகள் இன்றி ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு சில அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் விற்பனையாளர் சங்கம், அத்தியாவசிய வாகனங்களுக்கான நேரத்தைத் தவிர்த்து, பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்களுக்கான விற்பனை நேரத்தை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை அரசு வரையறுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…