அரசு இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வைகோ
அரசு இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் வாய்க்கோ அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை காட்டுப்பாடுதா அரசு பலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள வைகோ அவர்கள், ‘மாணவர்களுக்கு மூன்று மாத இடைவெளி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவர்களை தேர்வு எழுதுமாறு வற்புறுத்தக் கூடாது.
இது மாணவர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும் என்றும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உயிரோடு விளையாட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில், இந்தாண்டு அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.