#BREAKING : தனியார் பள்ளியில் சேரும் இந்த மாணவர்களுக்கான செலவை அரசுதான் ஏற்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேரும் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வேலூரில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேந்த மாணவரிடம், பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் புத்தகங்களுக்கு ரூ.11,977 கட்டணம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மாணவரின் தந்தை மகாராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேரும் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விதுறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்