தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா, தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் 42 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் தவறானது என்றும், எந்த ஒரு தனியார் மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…