அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Default Image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.

திருச்சி மனப்பாறையை அடுத்த கொடும்பபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியபின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் உள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி, நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், 120 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளி கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்து, பள்ளிக்கல்வி துறையின் மாணவ – மாணவிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பார் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்