நீட் தேர்வில் சாதிக்க தொடங்கிய அரசு பள்ளி மாணவர்கள்;குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக அரசு – எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Default Image

நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வின் முடிவு வெளியாகி உள்ளது. இதில்,தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 மாணவ,மாணவியர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அபர்ணா, 310 மதிப்பெண்களும்,அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி நவீன 138 மதிப்பெண்க ளும், மாணவன் மல்லிகார்ஜுன் 115 மதிப் பெண்களும் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல் சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ரங்கநாதன் 167 மதிப்பெண்களும்,அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நளினி பிரியா 140 மதிப்பெண்களும் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவ்வாறு,அன்னூர் வட்டாரத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் 5 பேர் முதல்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

இந்நிலையில்,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள்,நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க துவங்கிவிட்டனர்.
வாழ்த்துக்கள்.

ஆனால் இப்போதும் திமுக அரசு மாணவர்களை குழப்ப
முயற்சிக்கிறார்கள்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்