அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – மநீம
அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மநீம வலியுறுத்தல்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.
மத்திய அரசின் சர்வ சிக்சா அபியான் திட்டத்தில் 2012-ல் இவர்களை ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தியது தமிழக அரசு. பின்னர் அந்த திட்டம் “சமக்ர சிக்சா” (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நியாயமான அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா?
அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் @PONNUSAMYMILK அறிக்கை.@mkstalin @Anbil_Mahesh #MakkalneedhiMaiam #KamalHaasan #MNMPressRelease #MNM4Education pic.twitter.com/GD3iTArMPS— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 6, 2022