மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு மனமில்லை- எம்.பி. கனிமொழி!
கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவிக்கும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க அரசுக்கு மனமில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்ட வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3500-4800 பேருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க அரசும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி, “கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவிக்கும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க அரசுக்கு மனமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூறி வருகிறது அரசு. ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.
இந்த பெருந்தொற்று காலத்தில்… 1/2#tender
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 20, 2020
மேலும் அந்த பதிவில், மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க அரசுக்கு மனமில்லாமல், பற்றாக்குறை என தமிழக அரசு கூறிவருகிறது என தெரிவித்த அவர், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
இந்த பெருந்தொற்று காலத்தில் உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த நேரத்திலும் பணமே குறிக்கோளாக செயல்படக் கூடாது என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.