கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்க அரசாணை வெளியீடு..!
கொரோனா சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்க அரசாணை வெளியீடு
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில், மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது கொரோனாவிற்கு தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
அதற்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில், இந்த திட்டத்திற்க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவித்தபடி, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.#DMK #MKStalin pic.twitter.com/tZ4I16r7yW
— DMK (@arivalayam) May 10, 2021