செப்டம்பர்1முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி -நூலகத்துறை..!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், நூலகங்கள், விளையாட்டு அரங்கம், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் சில தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில், தற்போது நூலகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை எனவும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கேட்கும் புத்தகங்களை நூலக பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்கவேண்டும். நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் முகக்கவசம் கையுறை அணிவது அவசியம் என்று சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.