2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!
2025-ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த நாட்கள் என்றும், எத்தனை நாட்கள் எனவும் பின்வருமாறு.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 நாட்கள் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி விடுமுறையுடன் 2025ஆம் ஆண்டு தொடங்குகிறது.
பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 24 நாள்களில், 3 ஞாயிறும் அடங்கும். 24 நாள்களிலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. ஆனால், நவம்பர் மாதம் மட்டும் எந்தவித பொதுவிடுமுறை நாட்களும் கிடையாது.
2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை அறிவிப்பு !#GovernmentHoliday #TNGovt #Tamilnadu #holiday pic.twitter.com/ObdI6KXqTW
— Dinasuvadu (@Dinasuvadu) November 22, 2024