மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டம்..?
மதுக்கடைகள் தற்போது செயல்படும் 9 மணி நேரத்திற்கு பதில் 4 மணி நேரம் குறைக்க அரசு திட்டம்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு நாளை முதல் காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு மட்டும் ஏன்..? எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திறந்துள்ளனர். தற்போதைய நேரத்திற்கு பதில் இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டம்.
தற்போது செயல்படும் 9 மணி நேரத்திற்கு பதில் 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் கடையை வைத்து வந்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.