“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீட்டிற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 20 அடுக்குமாடி வீடுகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அம்பாசமுத்திரம் தாலுகா, பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி நகரத்தின் ரெட்டியார்பட்டியில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், விருப்பமுள்ள மற்றும் வீடற்ற மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு இலவசமாக ஒதுக்கப்படும்” என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள பாப்பாங்குளத்தில் கட்டப்பட்ட 240 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளையும், திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா, ரெட்டியார்பட்டி-கட்டம் II இல் 150 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளையும் தொழிலாளர்களுக்கு இலவசமாக ஒதுக்க உத்தரவிட்டுள்ளன.
ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகையான சுமார் ரூ.3 லட்சத்தை அரசே செலுத்த நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.