முந்துங்கள் அரசு உத்தியோகம்.! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. 242 பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

  1. உதவிப் பொறியாளர்: உதவிப் பொறியாளர் பணிக்கு 78 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு ரூ.37,700 முதல் ரூ .1,19,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    கல்வித்தகுதி: இளநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் முதுநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி: இந்த பணிக்கு 70 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ.37,700 முதல் ரூ .1,19,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    கல்வித்தகுதி: வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், கடல்சார் உயிரியல், உயிரி வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் நச்சுயியல், அனாலிட்டிகல் வேதியியல், அப்ளைடு வேதியியல் ஆகிய பிரிவில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. இளநிலை உதவியாளர்: 38 இடங்கள் காலியாக உள்ள இப்பணிக்கு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் கணினி படிப்பில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  4. தட்டச்சர்: 56 இடங்கள் காலியாக உள்ள நிலையில், ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை மாத சம்பளம்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpcb.gov.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-03-2020

தகுதிகள்: குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும் . ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்சமாக வயது 35 ஆக இருக்க வேண்டும். ஏனையோர் 30 வயதாக இருக்க வேண்டும்

தேர்வு கட்டணம்: ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ரூ.250 மற்றவர்களுக்கு ரூ.500 மட்டுமே அளிக்க வேண்டும். மேலும் தேர்வு நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

1 hour ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

2 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

4 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

4 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

5 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

5 hours ago