இனி அரசு அலுவலகங்கள், வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.!

Default Image

அரசு அலுவலகங்கள், வங்கிகள் 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையின்படி, தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.

இதற்கிடையில், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை  தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்