தமிழகம்:34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை;அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு,மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளானது வருகிற 15-ஆம் தேதியன்று வரும் நிலையில்,இந்திய அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
ஆனால்,வன்கொடுமை,பயங்கரவாதம்,பாலியல் வன்கொடுமை,மதம் மற்றும் சாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,இதனை வரவேற்பதாகவும்,ஆனால்,34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை; அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்; அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல.
74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…