தமிழக அரசே இதுபோன்ற செயலை நிறுத்தி கொள்ளவும் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
தமிழக அரசுக்கு கண்டனம். pic.twitter.com/iohGohZW9e
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 3, 2020
இதற்காக சாட்சி என்ற பெயரில் தங்கள் கட்சி தலைவர் கமல்ஹாசனை, காவல் நிலையத்துக்கு வரவழைத்து 3 மணிநேரம் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலமாக விசாரணை நடத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபோன்ற செயலை தமிழக அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.