ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…