ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மீறியதால் ஆலை மூடப்பட்டுள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் அவ்வாறு அனுமதித்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஆக்சிஜன் தயாரிக்க மற்றும் அதனை கையாளக்கூடிய நிபுணர்கள் தங்களிடம் தான் உள்ளனர்;தமிழக அரசின் வசம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தற்பொழுது இந்த கூடுதல் பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…