தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது – தினகரன்

Published by
Venu

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது.மும்மொழிக்கொள்கையைப் போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின்  உரிமைகளை பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது ன்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில்  அவாரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பு ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில்   விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சரியாக இருக்கும். அப்படி வரும் போது குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை 8-ஆம் வகுப்பு  தாய்மொழிக்கல்வி கட்டாயம்  என்று அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும்.மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே  (Optional ) என்றிருக்க வேண்டும்.அப்படி மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விருப்பும் மொழியாகவே இருக்க வேண்டும்.ஆனால் ” அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சம்ஸ்கிருதம் ஆக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமாட்டோம் ” எனும் உறுதிமொழியைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்தய அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

21 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

2 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

2 hours ago