தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் துரிதமாக செய்து அதற்குரிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்று சசிகலா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தார்கள், அதாவது, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும், அவை மழையில் நனைந்து ஈரமாகி முளைத்து விட்டதால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தங்களது வேதனையை தெரிவித்தார்கள்,
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மூன்றரை வட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடந்துவருவதாகவும். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், பல விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்ல முடியாமல் வீடுகள், மாட்டுக் கொட்டகை, களங்கள் உள்ளிட்ட இடங்களில் முட்டைகளாக அடுக்கி வைத்து, தாரப்பாய்களை போட்டு உரிய பாதுகாப்பின்றி மூடி வைத்துள்ளனர். தொடர் மழையால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதால் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் இதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தங்களது வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பல நெல் கொள்முதல் நிலையங்களில் எடுத்த நெல்லை கொண்டு செல்லாமல் அங்கேயே போட்டு வைத்து இருப்பதாகவும் இதன் காரணமாக எடுத்த நெல்லுக்கு தரவேண்டிய பணமும் இன்னும் தங்களது வங்கி கணக்கில் சேரவில்லை. எனவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பண்டிகை காலத்தைக் கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை என்றும் வேதனையை தெரிவித்தனர். எனவே, தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…