ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆனந்தன் என்ற இளைஞன் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அப்பாவி இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு குறைகள் இல்லாத புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே தீர்வு. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்!#Ordinance
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 10, 2021