குற்றவழக்கு மின்னணு ஆதாரங்கள்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!
குற்ற சம்பவங்களில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். – உயர்நீதிமன்றம் உத்தரவு.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த கோகுல் ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கோகுல் ராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, கோகுல்ராஜ் தரப்பில், வாதிட்ட வழக்கறிஞர், கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகள் முறையாக சேகரிக்கப்படவில்லை எனவும், மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் குறைபாடு இருந்ததாகவும் குற்றசாட்டை முன் வைத்தனர்.
இதற்கு காவல்துறை தரப்பு, மறுப்பு தெரிவித்து, மீன்னைனு ஆதாரங்களை சேகரிப்பதில் எந்த தவறும் நிகழ் வாய்ப்பில்லை என கூறினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, குற்ற சம்பவங்களில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.