தனி மையானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசே ஊக்குவிப்பதா -சென்னை உயர்நீதிமன்றம்
வேலூர் அருகே பாலத்தின் மேலிருந்து சடலம் கயிறுகட்டி இறக்கப்பட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் ஒரு விபத்தில் இறந்துவிட அவரது உடலை தங்கள் நிலத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அவரது உறவினர்கள் வேறுவழியின்றி 20அடி உயரத்தில் பாலத்தின் மேலிருந்து கயிறுகட்டி இறக்கினர்.இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவ பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியது .
இந்த தகவல் அறிந்து சென்னை உய்ரநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. இதனிடையே இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது .
இந்நிலையில் இவ்வழக்கு குறித்து தாசில்தார் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார் அதில் அவர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 50 சென்ட் இடம் மையானம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .இதனை கேட்ட நீதிபதி தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் இன்னும் பள்ளிகளில் ஆதி திராவிடர் என்பது நீக்கப்படவில்லையே ஏன் என கேள்வியெழுப்பினார் .
ஒரு பிரிவினருக்கு என தனி மையானம் அமைத்து அரசே சாதி பிரிவினையை ஊக்குவிப்பதா ? என்றும் ஆதி திராவிடருக்கு தனி மருத்துவமனை மற்றும் காவல்நிலையம் என்று இருக்கிறதா என்று கேட்டு அதிருப்தி தெரிவித்தார் .இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் வரும் 28ம் தேதி அறிக்கை தர உதிரவிட்டுள்ளார்.