தமிழக அரசு மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவி வாங்க ஆர்டர்.!
தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 3.2 லட்சம் பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன என்றும் கூறியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நாள் ஒன்றிற்கு 10,000 முதல் 13,000க்கு மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6009 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆகவும் உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 6009 பேரில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பிசிஆர் கருவிகளை பயன்படுத்துங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.