நிவாரணப் பொருட்களுக்கு IGST வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா தொடர்பான நிவாரணப் பொருட்களுக்கு IGST வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரி விலக்கு என்ற மத்திய அரசின் உத்தரவை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் நிவாரண பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல நிறுவனங்கள், அறக்கட்டளைகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மே 3-ம் தேதி முதல் ஐஜிஎஸ்டி வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, இந்த விலக்கு மூலம் இலவசமாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு ஜூன் 30 வரை ஐஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை. சுங்க வரிக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதிக்கு இனி ஐஜிஎஸ்டியும் விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)