உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது:
“உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் 4 கோடியே 76 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்”
இந்நிலையில்,தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி அளித்து,ரூ.4,76,23,000 நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…