ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியீடு ..!
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-ஆம் அலையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் ஒப்புதல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு குறித்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அறிக்கை தர உத்தரவு என அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.