விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு!
விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் மக்களுக்காக அரசு பல தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விளையாட்டு மைதானங்களில் ஆரம்பத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. விளையாட்டு மைதானங்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்ப தடை விதிக்கப்படவேண்டும், மைதானங்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படவேண்டும்.
தண்ணீர் பாட்டில்கள் அவரவர் கொண்டுவரவேண்டும் மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு மைதானம் வளாகத்திற்குள் துரித உணவுகள் தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்ய தடை. மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும்பொழுது மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.