வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை, இந்து அறநிலையத்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை முதன்மைச்செயலாளர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்தும் பணிகளையும் 10 பேர் கொண்ட பசுமைக்குழு கண்காணிக்கும்.
மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் பசுமை குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடம்பெறுவர், மாவட்ட எஸ்.பி, வனத்துறை அதிகாரி, பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளும் முழு உறுப்பினர்களாக இருப்பார்கள். பொதுமக்கள் சார்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் இரண்டு பேரும் மாவட்ட பசுமை குழுவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…