பொது இடங்களில் மரம் நடுவதற்கு 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Default Image

வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை, இந்து அறநிலையத்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை முதன்மைச்செயலாளர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்தும் பணிகளையும் 10 பேர் கொண்ட பசுமைக்குழு  கண்காணிக்கும்.

மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் பசுமை குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடம்பெறுவர், மாவட்ட எஸ்.பி, வனத்துறை அதிகாரி, பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளும் முழு உறுப்பினர்களாக இருப்பார்கள். பொதுமக்கள் சார்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் இரண்டு பேரும் மாவட்ட பசுமை குழுவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்