டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட தமிழக அரசு..!
- கொரோனா முழு கவச உடை தயாரித்தல் வழங்குவதற்கான டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த 68 நிறுவனங்களும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 8 நிறுவனங்களும் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசு தரப்பில் மருத்துவ உபகரணங்கள் இணையதளம் மூலமாகவே டெண்டர் விடப்படுகிறது. இணையதளம் மூலமாக வெளியிடக்கூடிய டெண்டர் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றபடுவதில்லை. இந்நிலையில், இன்று கொரோனா முழு கவச உடை தயாரித்தல் வழங்குவதற்கான டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. மொத்தமாக 76 நிறுவனங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய முழு கவச உடையை தயாரித்து வழங்குவதற்கு போட்டியிட்டன.
முழு கவசஉடை ( PPE KIT ) தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 68 நிறுவனங்களும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 8 நிறுவனம் என மொத்தம் 76 நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளது.