நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், நாகூர் தர்கா இடைக்கால நிருவாக குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், 11-07-2021-ல் நடைபெறவிருக்கும், சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் ஜனவரி 2022-இல் நடைபெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு கடந்த ஆண்டுகளில் இலவசமாக சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டது.
அதனைப்போன்று சிறப்பினமாக கருதி 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு விலையின்றி (இலவசமாக) வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூலை மாதம் நடைப்பெற்றுள்ள சின்ன ஆண்டவர் கந்தூரி திருவிழா மற்றும் ஜனவரி 2022ம் ஆண்டு நடைப்பெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனகட்டைகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…