தமிழக அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.!
தமிழக அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பின்னர் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 7ம் தேதி தமிழக புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களுக்கான துறைகளும் அப்போது ஒதுக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழக அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!#TNGovt #CMMKStalin #TamilNadu pic.twitter.com/mrN7I9IEd1
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 14, 2021