2022-23-ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் விரைவில் செய்யப்படவுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ள நிலையில், முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்கான நிதிநிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், அதனை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கலாகிறது ? இன்று மாலை சபாநாயகர் அப்பாவு அறிவிக்கவுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…