#BREAKING: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 9ஆம் தேதி வெளியீடு..!
தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளையறிக்கையை வரும் 9-ஆம் தேதி அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது, நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளையறிக்கையை வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 120 பக்கங்களை கொண்ட வெள்ளையறிக்கையை அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிடுகிறார்.
இந்த வெள்ளை அறிக்கையில், கடன் விபரம், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவுசெலவு , வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்டவை வெள்ளையறிக்கையையில் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும், வருவாய் இழப்பை எப்படி சரிசெய்வது உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.