#BREAKING: வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவித்த தமிழக அரசு..!
நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
வாக்காளர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களை சிறப்புமுகாமில் அளிக்கலாம். கொரோனா விதிகளை பின்பற்றி வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.