பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

கொரோனா காரணமாக பல்கலை மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து உயர் கல்வி துறை அரசு அறிவிப்பு கொண்ட அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை அறிக்கையில், உயர் கல்வித்துறையின் கீழ் இயங்க கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும், கல்வி தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025