உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – விஜயகாந்த் கோரிக்கை
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 472ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். ஆகையால், தொற்றில் உயிரிழந்தவர்களின் நலன் கருதி அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் குடுமபத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் தமிழக அரசு, அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்
குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். pic.twitter.com/qDvFOQ9OZC— Vijayakant (@iVijayakant) February 24, 2021